என் நாட்டிற்கு உதவுவதற்கு நன்றி: மோடிக்கு நன்றி தெரிவித்த 'நேபாளி' மனிஷா கொய்ராலா

Subscribe to Oneindia Tamil

மும்பை: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு விரைந்து உதவி செய்வதற்காக பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்தவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. முன்னாள் நேபாள பிரதமர் பி.பி. கொய்ராலாவின் பேத்தி தான் மனிஷா. மனிஷா நேபாளியாக இருந்தாலும் அவர் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இந்நிலையில் நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை டிவியில் பார்த்து மனிஷா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டிவிக்கு முன்பு தான் எப்பொழுதும் உள்ளேன். நேபாள செய்தியை பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இந்தியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு நேபாளத்திற்கு உதவி வருகிறது. இதற்காக நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு உதவி செய்து வருவதற்காக மனிஷா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+