மோடி குறித்து வாயை விட்ட மணிசங்கர் அய்யரால் தோல்வியைத் தழுவியதா காங்கிரஸ்?
குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீயாக வேலை செய்யது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தனர். இதேபோல் பாஜகவும் அதன் கோட்டையான குஜராத்தை நழுவ விட்டவிடக்கூடாது என்று முனைப்பில் பிரச்சாரம் செய்தது.

மணிசங்கர் அய்யரின் விமர்சனம்
முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான கேப்பில் அனல்பறக்கும் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் முன்னாள் எம்பி மணிசங்கர் அய்யர். அப்போது பிரதமர் மோடி ஒரு இழிப்பிறவி என தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

கட்சியிலிருந்து சஸ்பென்ட்
இது பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கிய காங்கிரஸ் மேலிடம் அவரது சர்ச்சைக்குரி பேச்சுக்கு விளக்கம் கேட்டது.

காங்கிரஸின் டிராமா
ஆனால் இதெல்லாம் குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் அரங்கேற்றும் நாடகம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி மணிசங்கர் அய்யரின் பேச்சை பெரும் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார்.

மக்கள் பதில் சொல்வார்கள்
மணிசங்கர் அய்யர் இழிவு படுத்தியது தன்னையா? அல்லது குஜராத் மக்களையா? அல்லது இந்த தேசத்தையா? நமது கலாச்சாரத்தையா என கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள் என்றும் கூறினார்.

மோடி ஹாட் பிரச்சாரம்
மேலும் தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். இதனை காங்கிரஸ் கட்சி மூடி மறைத்ததாகவும் ஹாட்டாக பிரச்சாரம் செய்தார்.

ரிவிட்டான விமர்சனம்
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கடைசி கட்டத்தில் மோடியின் பிரச்சாரமும், மோடி குறித்த மணிசங்கர் அய்யரின் தரக்குறைவான விமர்சனமுமே அந்த தொகுதிகளில் காங்கிரஸ் பின்தங்கியதற்கு காரணமாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications