தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவி விலக மாட்டார்: பிரதமர் அலுவலகம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil

வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன்சிங் பதவி விலக உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வரும் ஜனவரி 3ந் தேதி மன்மோகன்சிங் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
அனேகமாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகும் முடிவைத்தான் அதில் தெரிவிப்பார் என்று வெளியான தகவலை வதந்தி என்று கூறி, பிரதமர் அலுவலகம் உறுதியாக மறுத்துள்ளது. மன்மோகன்சிங் பதவி விலகுவதாகக் கூறுவது தவறானது; வதந்தி என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications