நாடாளுமன்ற நிதிக் கமிட்டி உறுப்பினரானார் "பிரதமர்" மன்மோகன் சிங்.. ராகுலுக்கும் பதவி!
டெல்லி: பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நாடாளுமன்ற நிதிக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவரமான மன்மோகன் சிங்குக்கு மோடி அரசு இந்தப் பதவியைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிதிக் கமிட்டியின் தலைவராக வீரப்பமொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோருக்கும் இக்குழுவில் இடம் தரப்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்ஹா மகனுக்கும் இடம்
இக்குழுவில் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கும் இடம் கொடுத்துள்ளனர். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

எஸ்எஸ். அலுவாலியா
மேலும் எஸ்.எஸ். அலுவாலியா, பாஜகவின் கிரித் சோமையா ஆகியோரும் நிதிக் கமிட்டியில் இடம் பிடித்துள்ளனர்.

91ல் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்
மன்மோகன் சிங் கடந்த 1991ம் ஆண்டு நரசிம்மராவ் அமைச்சரைவையில் நிதியமைச்சராக செயல்பட்டவர். அப்போதுதான் முதல் முறையாக இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் முகத்தையும் அப்போது முழுமையாக மாற்றியமைத்தார்.

ராகுல் காந்திக்கும் பதவி
அதேபோல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழுவில் உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. கடந்த லோக்சபாவில் ராகுல் காந்தி மனித வள மேம்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றுக்கான நிலைக்குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.

சோனியாவுக்கு இல்லை
அதேசமயம் சோனியா காந்திக்கு எந்த நிலைக்குழுவிலும் இடம் தரப்படவில்லை. அதேசமயம், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உள்துறை அமைச்சக நிலைக்குழுவில் உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு காங்கிரஸ் கட்சியின் பட்டச்சார்யா தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேவெ கெளடாவுக்கும்
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, லோக்சபா காங்கிரஸ் துணைத் தலைவர் அமரிந்தர் சிங், மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாதுகாப்புத்துறை நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வயசான கந்தூரி பாதுகாப்புத்துறை நிலைக்குழுத் தலைவர்!
வயதானவர் என்று கூறி அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்ட பி.சி.கந்தூரிக்கு பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் தலைவர் பதவியைக் கொடுத்துள்ளனர்.

சரத் பவார்- பிரபுல் படேல்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மனித வள மேம்பாட்டுக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகியுள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல், தொழில்துறைக்கான நிலைக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.

ரயில்வேக்கு ஏ.கே.அந்தோணி
ரயில்வே துறைக்கான நிலைக்குழு உறுப்பினர்களாக காங்கிரஸ் கட்சியின் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடடே.. அத்வானி!
பாஜகவின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து சுத்தமாக ஓரம் கட்டப்பட்டு விட்ட மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக பாஜகவின் அனுராக் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

24 குழுக்களில் ஐந்திற்கு காங். தலைவர்கள்
மொத்தம் உள்ள 24 நிலைக்குழுக்களில் 5 குழுக்களின் தலைவர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.

சுதர்சன நாச்சியப்பன்
இதில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரரான சுதர்சன நாச்சியப்பனை சட்டத்துறைக்கான நிலைக்குழுத் தலைவராக அரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்கும் தலைவர் பதவி
மேம்பாட்டுத்துறைக்கான
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications