ஒடிசாவில் வீடு புகுந்து இருவரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி பகுதியில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள 2 கிராமத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 30 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்ட்கள் பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வந்த தலாசங்கர், தொபுனு நாயக் ஆகிய இருவரையும் வீடு புகுந்து மாவோயிஸ்டுகள் இழுத்து சென்றுள்ளனர். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக சென்ற பிறகு இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
கிராமத்தை சேர்ந்த மேலும் ஒருவரையும் மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றனர். ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் அதை எதிர்த்து சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் தேர்தல் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்திலும் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications