வன்முறை எதிரொலி.. மும்பையை ஆட்டிப் படைத்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் முடிவிற்கு வந்தது!
மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதனால் 20 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மொத்தமாக அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியை சேர்ந்த மக்கள் இடஒதுக்கீட்டிற்காக பல வருடங்களாக போராடி வருகிறார்கள். தங்களுக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் இல்லை, தங்களை ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
மூன்று நாள் முன்பு நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையையே பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை ஆனது
மராத்தா கிரந்தி மோட்சா சார்பாக போராட்டம் நடந்தது. முதலில் அமைதியாகத்தான் போராட்டம் நடந்தது. ஆனால் அதில் ஒரு மராத்தா இன விவசாயி, பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனால், அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரண்மாகவே கடந்த மூன்று நாட்களாக அங்கு பெரிய கலவரம் நடந்து வந்தது.

செல்ல முடியாது
இந்த நிலையில் மொத்தமாக மும்பையை இந்த போராட்டம் முடக்கி போட்டு இருக்கிறது. அந்த நகரத்திற்கு மூன்று நாட்களாக யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையம் ஏற்பட்டு இருக்கிறத. முக்கியமாக மும்பை எக்ஸ்பிரஸ் சாலை மூடப்பட்டது. இதனால் அந்த மாநிலமே முடங்கியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த போராட்டத்திற்கும், அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததிற்கும் பொறுப்பேற்று, முதல்வர் பட்நாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மராத்தா கிரந்தி மோட்சா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் முதல்வர் இந்த கோரிக்கையை பெரிய விஷயமாக கருதவில்லை. இதனால் இந்த போராட்டம் இன்னும் வீரியம் அடைந்தது.

ரயில் இயங்காது
தற்போது அங்கு பள்ளிகள் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. அதேபோல் ரயில் போக்குவரத்தும் அங்கே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. மராத்தா கிரந்தி மோட்சா அமைப்பு மட்டுமில்லாமல் இன்னும் 13 இயக்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு குழம்பிப் போய் போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தது.

வாபஸ்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போலீஸ் இந்த போராட்டத்தை போலீஸ், அரசு மிகவும் மோசமாக கையாண்டதாக மாரந்தா கிரந்தி மோட்சா அமைப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications