பாகுபலி பஞ்சாயத்து.... 90% முட்டாள் இந்தியர்களை 99% முட்டாள்களாக்கும் ஊடகங்கள்... கட்ஜூ காட்டம்!
பாகுபலி திரைப்படம் குறித்து தலைப்பு செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் 90 சதவீத முட்டாள்களாக உள்ள மக்களை 99 சதவீத முட்டாள்களாக்க விரும்புகின்றன.
டெல்லி: பாகுபலி திரைப்படம் குறித்து தலைப்பு செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் 90 சதவீத முட்டாள்களாக உள்ள மக்களை 99 சதவீத முட்டாள்களாக்க முற்படுகின்றன என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக சாடியுள்ளார்.
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 என்ற இரண்டாம் பாகம் நேற்று முதல் திரையிடப்பட்டது. இது முதல்நாளே ரூ.125 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெ்ளியாகின. அனைத்து பத்திரிகைகளும், செய்தி நிறுவனங்கள் பாகுபலி 2 குறித்த செய்திகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், பாகுபலி 2 படத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்ற தகவலை பார்க்கும்போது மக்களுக்கு அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை எனிலும் அவர்களை திசைதிருப்பும் முயற்சிகளை நன்கு செய்கின்றனர்.
அவர்களுக்கு மதம், திரைப்படங்கள், ஜோதிடம், சாமியார்கள், கிரிக்கெட், ஊடகங்கள் ஆகியவற்றை மட்டும் சரக்கஸ் வித்தை போல காட்டி வருகிறீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாகுபலி குறித்து சில ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக வெளியிடுகின்றன என்று இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று முகநூல் பயன்பாட்டாளர் ஒருவர் கட்ஜுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் பதில் கொடுக்கையில், மக்களில் 90 சதவீதத்தினர் முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை 99 சதவீத முட்டாளாக்க ஊடகங்கள் விரும்புகின்றன என்பதை நிரூபிக்கிறது என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications