”உங்களுக்கு தேன்நிலவு ஃபிரீ…ஃபிரீ”... விதவைக்கு நீங்கள் மறுவாழ்வு தந்தால்
ராய்ப்பூர்: தன் கணவனை இழந்து வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் தவிக்கும் விதவைகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்க நேச்சர் கேர் சோசியல் வெல்பர் சொசைட்டி என்ற சமூக நல நிறுவனம் ராய்பூரை சேர்ந்த, தைரியமாக விதவை ஒருவரை மணந்த இளைஞரை பாராட்டும் வகையில் அவர்களுக்கு தேன்நிலவு சுற்றுலாவை பரிசாக அளித்துள்ளது.

அவர்கள் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த தம்பதியினருக்கு 4 பகல், 3 இரவுகளுக்கான தேன்நிலவு சுற்றுலாவை இலவசமாக அளித்தனர்.அந்த தம்பதியினர் ஆசியாவில் உள்ள 45 குறிப்பிட்ட இடங்களில் எதை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் தங்களது தேன்நிலவிற்கு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விதவை பெண்களை திருமணம் செய்ய முன் வரும் ஆண்களுக்கு, அவர்களின் வெளிநாட்டு தேனிலவு பயணத்துக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதுமணத் தம்பதியர் ஐந்து நாட்கள், ஆசிய நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டிற்கு, தேனிலவு பயணம் மேற்கொள்ளலாம். அதற்கான, விமான டிக்கெட், தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அந்த அமைப்பே ஏற்கும்.
இந்த அமைப்பின் இயக்குனர், வினிதா பாண்டே கூறியபோது," எங்களால் முடிந்த அளவு இந்த சமூகத்துக்காக இது போன்ற சில நற்பணிகளை செய்து வருகிறோம். இத்துடன் விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக அந்த ஜோடிகளுக்கு வேலைவாய்ப்பு, வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும்படி மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications