செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான்... அடுத்த வருடம் செவ்வாயை சென்றடையும்
பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தனது செவ்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது மங்கள்யான்.
அடுத்த வருடம் செப்டம்பரம் மாதம் 24ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.
நேற்று நள்ளிரவு சரியாக 12.49 மணிக்கு செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான் செலுத்தப்பட்டது.

44 கோடி கிலோமீட்டர் பயணம்
கிட்டத்தட்ட 44 கோடி கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது மங்கள்யான்.

300 நாட்கள்
300 நாட்களுக்கு இந்தப் பயணம் நீடிக்கும். அதன் பின்னர் அடுத்த வருடம் செப்டம்பர் 24ம் தேதி அது செவ்வாயை சென்றடையும்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில்
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மங்கள்யானின் செலவானது மிகவும் குறைவாகும். ரூ. 450 கோடி செலவில் இதை உருவாக்கி செவ்வாய்க்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியா.

440 நியூட்டன் திரவ என்ஜின் இயக்கம்
மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கான பாதையில் செலுத்துவதற்காக அதன் 440 நியூட்டன் திரவ என்ஜினை நேற்று விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினர். கிட்டத்தட்ட 22 நி்மிடங்களுக்கு திரவ எரிபொருள் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் விநாடிக்கு 648 மீட்டர் என்ற வேகத்தில் மங்கள்யானின் வேகம் அதிகரித்தது.

புவி வட்டப் பாதையிலிருந்து விடுபட்டது
இதையடுத்து புவி வட்டப் பாதையிலிருந்து மங்கள்யான் விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கான பாதைக்குள் நுழைந்தது.

எல்லாமே சூப்பர்
இந்த நொடி வரை மங்கள்யான் திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்கிறது. அதன் பாதை உள்பட அனைத்துமே சிறப்பாக உள்ளன. விண்கலமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில்
தற்போது மங்கள்யான் விண்கலம் மணிக்கு 41,000 கிலோமீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications