கை குலுக்க, தொட்டுப் பார்க்க... நக்மாவை மொய்த்து எடுக்கும் மக்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

மீரட்: நடிகை நக்மா இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைப் பார்த்து சற்றே மிரண்டபடி காணப்படுகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக அவர் போகும் இடமெல்லாம் கூட்டம் கட்டி ஏறுகிறது. ஆனால் அவரது பேச்சைக் கேட்பதை விட அவரைத் தொட்டுப் பார்க்கவும், கை குலுக்கவும்தான் கூட்டம் கூடுவதால் நக்மா சற்றே அப்செட்டாகியுள்ளார்.

இந்தியில் அறிமுகமாகி தமிழில் பிரபல நடிகையாக மாறியவர் நக்மா. தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நிறைய நடித்துள்ளார்.

தற்போது இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் உ.பி. மாநிலம் மீரட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

முதல் நாளிலிருந்தே குழப்பம்தான்

முதல் நாளிலிருந்தே குழப்பம்தான்

ஆனால் நக்மா வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதலே குழப்பம்தான். அவரை வேட்பாளராக பார்ப்பதை விட கவர்ச்சிப் பொருளாகவே பலரும் பார்ப்பதால் நக்மா பெரும் வேதனை அடைந்துள்ளார்.

கன்னத்துடன் உரசிய எம்.எல்.ஏ.

கன்னத்துடன் உரசிய எம்.எல்.ஏ.

மீரட்டுக்குப் பிரசாரத்திற்காப் போன இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வயதான எம்.எல்.ஏ. நக்மா கன்னத்துடன் ஒட்டியபடி ஏதோ செய்ததால் பரபரப்பானது.

சில்மிஷம் செய்த தொண்டர்

சில்மிஷம் செய்த தொண்டர்

இதேபோல இன்னொரு இடத்தில் தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்ததால் கோபமடைந்த நக்மா அவருக்கு கன்னத்தில் விடடார் ஒரு பளார்.

இப்படியே செஞ்சா வர மாட்டேன்

இப்படியே செஞ்சா வர மாட்டேன்

இப்படி போகும் இடமெல்லாம் செக்ஸ் சில்மிஷங்கள் அதிகரித்ததால் வெகுண்ட நக்மா, இப்படிய நடந்தால் இனிமேல் மீரட்டுக்கே வரமாட்டேன் என்று கோபத்துடன் கூறினார்.

இதெல்லாம் சகஜம்.. விளக்கும் காங்கிரஸ்

இதெல்லாம் சகஜம்.. விளக்கும் காங்கிரஸ்

ஆனால் நக்மா மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர் விஐபியாக வேறு இருக்கிறார். நடிகையாகவும் இருக்கிறார். எனவே தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், இது சகஜம்தான் என்று உ.பி. காங்கிரஸார் விளக்கெண்ணைத்தனமாக விளக்கம் அளித்தனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்

கட்டுக்கடங்காத கூட்டம்

இதனால் வேறு வழியில்லாமல் தொடர்ந்து பிரசாரத்தில ஈடுபட்டு வருகிறார் நக்மா. அவர் போகும் இடமெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுகிறதாம்.

கை குலுக்க ஆர்வம்

கை குலுக்க ஆர்வம்

நக்மா என்ன பேசுகிறார் என்பதை கேட்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக அவருக்குக் கை குலுக்க முண்டியடிக்கிறார்கள். அவரை வேடிக்கை பார்க்க அலை மோதுகிறார்கள்.

இறங்க முடியலையே...

இறங்க முடியலையே...

போகும் இடமெல்லாம் இப்படி ஆண் தொண்டர்கள் அலை மோதுவதால் வாகனத்தை விட்டு இறங்காமலேயே பிரசாரம் செய்து பேசுகிறாராம் நக்மா.

எத்தனை ஓட்டு விழப் போகுதோ...

எத்தனை ஓட்டு விழப் போகுதோ...

இப்படி நக்மா போகும் இடமெல்லாம் கூட்டம் கூடினாலும் அவரை வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை கூட்டமும் வருகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. எனவே இதில் எத்தனை பேர் நக்மாவுக்கு ஓடடுப் போடப் போகிறார்கள் என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+