மும்பை: தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
மும்பை: மும்பையின் பரெல் பகுதியில் உள்ள மவுலி சதன் என்ற இடத்திற்கு அருகில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதியில் சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. மேலும் அங்கிருந்த ஜெனரேட்டர் மற்றும் செல்போன் கோபுரமும் எரிந்து நாசமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்த தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்களும், 8 தண்ணீர் டேங்கர் லாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் இதுவரை தெரியவில்லை.
Massive fire in Mauli Sadan (Parel,Mumbai), fire tenders at the spot dousing the flames. pic.twitter.com/KsDqAVeSP0
— ANI (@ANI_news) December 29, 2015 -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications