காங்.குக்காக ஓட்டுப் போட்டு வேஸ்ட் பண்ணாதீ்ங்க.. முஸ்லீம்களுக்கு மாயா கோரிக்கை
காஸியாபாத்: காங்கிரஸை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
உ.பி. மாநிலம் காஸியாபாத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் புஹார, இஸ்லாமியர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், எனது முஸ்லிம் சகோதர்களுக்கு ஓர் வேண்டுகோள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். அந்த கட்சி, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவதன் மூலம் உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம்.
பாரதிய ஜனதா அல்லது சமாஜ்வாடி கட்சிக்கும் ஆதரவு தர வேண்டாம். அவற்றிற்கு பதிலாக சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
காஜியாபாத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாபரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார் மாயாவதி
முன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து இமாம் புஹாரி அறிவித்தபோது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று இஸ்லாமியர்களுககு அழைப்பு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.--
-
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications