உ.பி. சட்டசபை தேர்தலில் வெல்ல மத கலவரத்தை தூண்ட பாஜக சதி... மாயாவதி சாடல்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வெல்வதற்காக அம்மாநிலத்தில் மத வன்முறைகளைத் தூண்டிவிட பாஜக சதி செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கி உள்ளன.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் கைரனா பகுதியில் இந்துக்களை விட முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர். அங்கு அவர்கள் இந்துக்களை விரட்டியடிப்பதாக பாரதிய ஜனதா எம்.பி. ஹூக்கும்சிங் புகார் கூறி இருந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் ஹூக்கும்சிங் பின்னர் தம்முடைய கருத்துகளை மாற்றிக் கொள்வதாக கூறியிருந்தார். அப்பகுதியில் இருந்து இந்துக்களும் முஸ்லிம்களும் தாங்களாகவே பொருளாதார காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக குழு ஒன்று நிலைமைகளைக் கண்டறிய கைரானா பகுதிக்கு செல்ல உள்ளது. இதனிடையே பாஜக எம்.பி. ஹூக்கும்சிங் கருத்துகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் வறுமை காரணமாக வேலை தேடி பெருநகரங்களுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மாநில அரசுதான் காரணம். உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தாததால் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இதற்கு பாரதிய ஜனதா எம்.பி. வேறு காரணத்தை கூறுவது தவறான செயல். உத்தரபிரதேசத்தில் மாநில மேல்சபை தேர்தலிலும், ராஜ்யசபா தேர்தலிலும் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதனால் மாநிலத்தில் கலவரத்தை தூண்டி விட்டு இதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என கருதுகின்றனர். இதற்கான நீண்டகால சதித்திட்டத்தை அவர்கள் தீட்டி உள்ளனர். இதற்காக மக்களை திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இது உத்தரபிரதேச மாநில மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications