22 வயது எம்.பி.ஏ. மாணவியை பலாத்காரம் செய்த 52 வயது விடுதி உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: ராஜஸ்தானில் 22 வயது எம்.பி.ஏ. மாணவி பெண்கள் தங்கும் விடுதியின் உரிமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஜெய்பூர் ராம்நகர் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் விடுதியில் தனியாக இருந்தபோது அவரை விடுதியின் உரிமையாளர் ராம்கோபால் குமாவத்(52) பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் ராம்கோபாலை கைது செய்தனர்.

மேலும் ஜெய்பூரில் இருக்கும் புதிய இந்திரா காலனியில் 9 வயது சிறுமியை பிரஹம்பூரியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரது ஆடைகளை அவிழ்த்து சில்மிஷம் செய்த 12 மற்றும் 14 வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அந்த 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சிறுவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+