தனியார் கல்லூரிகள் மருத்துவ நுழைவு தேர்வு நடத்த முடியாது: மருத்துவ கவுன்சில் வாதம்
டெல்லி: மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு (NEET) நடத்துவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
மாநிலங்கள், தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்கள் மருத்துவ மாணவர்களுக்கு தனித்தனி நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும், நாடு முழுமைக்கும், ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கடந்த மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, தமிழகம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் என்று தெளிவாக கேட்கட்டும். ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், மொத்தம் 20 நிமிடங்கள் வழக்கு நடைபெறும் என்றும், ஒவ்வொரு மாநிலமும், ஒரு நிமிடத்தில் தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் விகாஸ்சிங் வாதம் முன் வைத்தார். அவர் கூறுகையில், மாநில அரசுகள் நடத்தும் கல்லூரி தவிர பிற மருத்துவ கல்லூரிகள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு வேண்டுமானால், மாநில அரசின் கல்லூரிக்கு, அந்தந்த மாநில அரசுகளே தேர்வை நடத்தலாம். அதேநேரம், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று, மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை, திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications