சர்க்கரை இறக்குமதிக்கு தடைகோரி கரும்பு விவசாயிகள் டெல்லியில் டிச.12ல் ஆர்பாட்டம்
டெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். டெல்லி செல்லும் கரும்பு விவசாயிகளை வைகோ நேற்று வழியனுப்பி வைத்தார்
சர்க்கரை இறக்குமதியை தடை செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும், கரும்பிற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தலைநகர் டெல்லியில் நடத்த டிசம்பர் 12ம் தேதி உள்ளனர்.

இதற்கு ம.தி.மு.க உள்பட பல்வேறு கட்சிகள், விவசாய சங்க தலைவர்கள் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி டெல்லி செல்வதற்காக திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை சென்டிரலுக்கு கரும்பு விவசாயிகள் வந்தனர். இவர்களை வழியனுப்ப ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார்.
பின்னர் அவர் அங்கிருக்கும் கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசினார். ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தி அவர்களை வழியனுப்பிவைத்தார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய கரும்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசகருமான அ.கணேசமூர்த்தி, தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.காசியண்ணன், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க தலைவர் வி.சண்முகராசு, தமிழ்நாடு போராட்டக்குழுவின் நெறியாளர் செ.அர்ச்சுணன் மற்றும் சர்க்கரை ஆலை விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இருந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications