மீரட் கற்பழிப்பு.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜ்நாத் மகன், இந்து மகாசபை தலைவர் ஆறுதல்!
மீரட்: மீரட் அருகே மதராசாவுக்கு தூக்கிச் சென்று கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் நீரஜ் சிங் மற்றும் இந்து மகாசபைத் தலைவர் சுவாமி சக்ரபாணி ஆகியோர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளம் பெண் ஆசிரியர் ஒருவரை சிலர் மதராசாவுக்கு கடத்திச் சென்று கற்பழித்தனர்.
முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கும் கடத்தி சென்றதாகவும், அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் முக்கிய குற்றவாளி தப்பிவிட்டார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் நீரஜ் சிங் மற்றும் இந்து மகாசபைத் தலைவர் சுவாமி சக்ரபாணி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அப்பெண்ணின் தாயாருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக உள்ளது," என்றார்.
மேலும் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்துவிட்டதற்கு இது ஒரு பெரிய உதாரணம் என்றார் இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications