சில்மிஷம் செய்த தாத்தாவை மன்னித்து இளைஞருக்கு ‘அறை’ கொடுத்த காங். வேட்பாளர் நக்மா...

Subscribe to Oneindia Tamil

மீரட்: தேர்தல் பிரச்சாரத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த இளைஞர் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் சார்பில்போட்டியிடும் நடிகை நக்மா அடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நாள் முதற்கொண்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நக்மா.

முத்தமிட முயன்ற தாத்தா...

முத்தமிட முயன்ற தாத்தா...

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீரட் தொகுதிக்குட்பட்ட ஹாபூரில் நடந்த பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட நக்மாவை ஹாபூர் எம்.எல்.ஏ. கஜராஜ் முத்தமிட முயன்றது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....

ஆனால், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ரேஞ்சில் அது குறித்து விளக்கப் பேட்டி அளித்தார் நக்மா. இது மேலும் சர்ச்சையை அதிகரிக்கச் செய்தது.

ஆவேசமான குஷ்பு...

ஆவேசமான குஷ்பு...

இது தொடர்பாக திமுக உறுப்பினர் குஷ்பு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதில், நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரை அறைந்திருப்பேன் என தெரிவித்திருந்தார்.

சுற்றி வளைத்த தொண்டர்கள்....

சுற்றி வளைத்த தொண்டர்கள்....

இந்நிலையில் தான் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தை முடித்து விட்டு காரில் ஏற முயன்ற நக்மாவை தொண்டர்கள் கூட்டம் சுற்றி வளைத்துள்ளனர்.

சில்மிஷம் செய்த இளைஞர்....

சில்மிஷம் செய்த இளைஞர்....

கூட்டத்தை சாதகமாக்கிக் கொண்ட இளைஞர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார் நக்மா.

விட்டார் ஒரு அறை...

விட்டார் ஒரு அறை...

உடனடியாக தனது அருகே நின்றிருந்த அந்த இளைஞரை அறைந்துவிட்டு வேகமாகக் காரில் ஏறிச் சென்று விட்டார். இக்காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப் பட்டது.

அப்படியா... எப்போங்க...?

அப்படியா... எப்போங்க...?

ஆனால் நடந்த சம்பவம் குறித்து மீரட் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான காங்கிரஸ் தலைவரிடம் கேட்கப் பட்டதற்கு ‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. நக்மாவிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை' என விளக்கமளித்துள்ளார்.

மிரட்டல்...

மிரட்டல்...

இதனிடையே, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் மீரட்டிற்கு வரமாட்டேன் என்று நடிகை நக்மா தெரிவித்தார்.

தாத்தாவை மன்னித்த நக்மா...

தாத்தாவை மன்னித்த நக்மா...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில்மிஷம் செய்த வயது மூத்த காங்கிரஸ் தலைவரை ஒன்றும் செய்யாமல் மன்னித்து விட்ட, இளைஞரை தண்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+