மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத்தை சந்தித்த பாபா ராம்தேவின் நண்பர்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத்தை மூத்த பத்திரிகையாளரும் யோகா குரு பாபா ராம்தேவின் நண்பருமான வெத் பிரதாப் வைதிக் சந்தித்து பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தால் ராஜ்யசபா நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டன.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூளையாக இருந்தவர் ஜமாத் உத் தவாத் என்ற இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் என்பது குற்றச்சாட்டு. அவரை பாகிஸ்தானின் லாகூரில் மூத்த பத்திரிகையாளரும் ராம்தேவின் நெருங்கிய நண்பருமான வேத் பிரதாப் வைதிக், கடந்த 2-ந் தேதி சந்தித்து பேசியுள்ளார்.

Meeting Between Ramdev's Aide and 26/11 Mastermind Hafiz Saeed Sparks Row

இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய அரசின் தூதரா?

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், வேதிக் ஹபீஸ் சயீத்தை வைதிக் சந்தித்து உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தூதராக அல்லது பிரதமரின் தூதராக வைதிக் சென்றிருக்கிறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவும் விமர்சனம்

இந்த சந்திப்பை பாரதிய ஜனதா கட்சியும் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "வேதிக்கின் நோக்கம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

சந்திப்பு ஏன்?- வைதிக் விளக்கம்

இதற்கு விளக்கம் அளித்துள்ள வைதிக், நான் யாருடைய தூதராகவும் சயீத்தை சந்திக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் செல்வது குறித்து நான் ஹபீஸ் சயீத்திடம் கூறிய போது அவரை வரவேற்பதாக கூறினார் என்கிறார் .

ராஜ்யசபாவில் அமளி

ஹபீஸ் சயீத்தை வைதிக் சந்தித்த விவகாரம் ராஜ்யசபாவில் இன்று எழுப்பப்பட்டது. ராஜ்யசபா இன்று காலை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, மத்திய அரசின் தூதராக வைதிக் செல்லவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அன்று யாசின் மாலிக்

இதே ஹபீஸ் சயீத்தை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், பாகிஸ்தானில் சந்தித்த போது அவரது பாஸ்போர்ட்டை முடக்கி கைது செய்ய வேண்டும் என்று முன்னர் பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+