மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் நிச்சயம் புது அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணை கட்டுவதை கண்டித்து கடந்த 28ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இது தவிர மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சூழலில் அணை கட்ட ஆதரவு அளிக்குமாறு கூறி கர்நாடக எம்.பி.க்கள் மோடியை சந்திக்கவிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது கூறுகையில்,
மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும். அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் உரிமையை முன்னெடுக்க அனைவரும் போராட தயாராக வேண்டும்.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 4 பேர், அனைத்து கட்சி எம்.பி.க்கள் டெல்லி சென்று பிரதமரிடம் மனு அளிப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications