மேகாலயா யாருக்கு? 59 தொகுதிகளுக்கு அமைதியாக முடிந்தது ஓட்டுப்பதிவு! பாஜக, காங், மம்தா கட்சி போட்டி
மேகாலயாவில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நடக்கும் நிலையில் குறுக்கே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் புகுந்து தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. தற்போது கூட்டணியை விட்டு விலகி பாஜக தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இன்று 59 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறுக்கே புகுந்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்த பிரபலமான கட்சிகளுடன் தற்போது அங்கு முதல்வராக உள்ள என்பிபி கட்சியும் மல்லுக்கட்டி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு 59 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கு கடந்த மாதம் சட்சபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
நாகலாந்து, மேகாலயாவில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மேகாலயாவில் 60 தொகுதிகள்
மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த கூட்டணிக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

59 தொகுதிகளுக்கு தேர்தல்
இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் மம்தா பானர்ஜியின் வியூகம் வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த முகுல் சங்மா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இங்கு தற்போது அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் சட்டசபை தொகுதி வேட்பாளரான யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானர். இதனால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாறாக 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

முட்டிமோதும் கட்சிகள்
இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் 59 தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் போட்டியிட்டுள்ளது. என்பிபி கட்சி 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர பிற கட்சிகள், சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர். மொத்தம் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 36 பேர் பெண்கள் ஆவார்கள். இங்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.

துவங்கிய ஓட்டுப்பதிவு
தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 75 ஆயிரத்து 236 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10.99 லட்சம் பேர் பெண்களாகவும், 10.68 லட்சம் பேர் ஆண்களாகவும் உள்ளனர். முதல் தலைமுறை ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில் தான் மேகாலயாவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 3,419 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

பாதுகாப்புகள் தீவிரம்
மாநிலத்தில் அமைதியாக தேர்தலை நடத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 323 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றம் நிறைந்தவை எனவும் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் திரிபுரா, நாகலாந்தைபோல் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications