அட இந்தியாவுல இப்டி ஒரு வித்தியாசமான முதல்வரா.. எல்லாம் கொரோனாவால தான்.. ஆனாலும் கேட்க நல்லாயிருக்கே
மேகாலய முதல்வர் கோன்ராட் சங்கமா கிதார் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிலாங்: கொரோனாவால் உலகமே பயத்தில் மூழ்கியிருக்கும் சூழலில், மேகாலய முதல்வர் கோன்ராட் சங்கமா எலக்ட்ரி கிதாரில் அமெரிக்க ராக் பாடலை வாசிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கால் அதிகாரத்தில் இருப்பவர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்.
வேலை இழப்பு காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதும், சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த முயற்சிப்பதும் தலையாய வேலையாக இருக்கிறது.

மன அழுத்தம்
இதற்காக மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இரவு பகல் பாராமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதில் இருந்து தப்பிக்க ஓய்வு நேரங்களில் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் நேரம் செலவிடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

மேகாலய முதல்வர்
அந்த வகையில் தொடர் பணிகளால் திக்குமுக்காடி போன மேகாலய முதல்வர் கோன்ராட் சங்மா, தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்து கொஞ்சம் இளைப்பாறி இருக்கிறார். சங்மாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் இசை. அதுவும் மேற்கத்திய இசையில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர்.

கிதாரில் அயர்ன் மேய்டன் பாடல்
நல்ல கிதார் வாசிப்பாளரான சங்மா, தனது எலட்ரிக் கிதாரில் மேற்கத்திய இசை வகையைச் சேர்ந்த அயர்ன் மேய்டன் பாடலை வாசித்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடந்து முடிந்த மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள கொஞ்சம் இசைத்தேன். அயர் மேய்டன் வாசித்து பல நாட்கள் ஆகிவிட்டது. எனவே நிச்சயம் சில தவறுகள் இருந்திருக்கும்", எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோ
கோன்ராட் சங்மா கிதார் வாசிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரது வாசிப்பை கேட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அயர்ன் மேய்டன் பாடலை வாசிக்கும் முதலமைச்சர் இந்தியாவிலே இவர் ஒருவர் தான் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications