மேகாலயா ஹனிமூனில் கணவனைக் கொல்ல சோனம் தீட்டிய சதித்திட்டம்?.. மாஸ்டர் மைண்டே இவருதான் - பகீர் தகவல்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் சென்ற இந்தூர் புதுமண தம்பதி வழக்கில், திடீர் திருப்பமாக தனது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறை சோனமை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சோனமுடன் சேர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் இந்த தம்பதி மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றனர். சில்லாங், சோஹ்ரா பகுதியில் உள்ள ஒரு ஹோம் ஸ்டே விடுதியில் அவர்கள் தங்கியிருந்த நிலையில், கடந்த மே 23 ஆம் தேதி ரூமை செக் அவுட் செய்திருக்கிறார்கள்.

ரூம் செக் அவுட் செய்த சிறிது நேரத்தில் இந்த தம்பதி மாயமாகிவிட்டனர். உறவினர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. புதுமண தம்பதி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேகாலயா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அவர்கள் இருவரும் கிடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் இருந்தனர். ஆனால் கடந்த 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் ஜார்ஜ் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அங்கிருந்த தடயங்களை பார்த்தபோது ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதேநேரத்தில் சோனமின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
காவல்துறை சிறப்புப் படை அமைத்து சோனமை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபூரில் கண்டறியப்பட்டுள்ளார். திடீர் திருப்பமாக தனது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறை சோனமை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சோனமுடன் சேர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "சோனமுக்கு ராஜ் குஷ்வஹா என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இவருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இதனால் ஹனிமூனில் வைத்து ராஜா ரகுவன்ஷியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதற்கான அனைத்து சதித்திட்டங்களையும் தீட்டி கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டது ராஜ் குஷ்வஹா தான்.
ராஜ் குஷ்வஹாவும் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த கொலைக்காக அவர்கள் மத்தியப்பிரதேசம் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை பணியமர்த்தியுள்ளனர். அந்த மூன்று பேருடன் ராஜ் குஷ்வஹாவும் மேகாலயா சென்றுள்ளார். அங்கு ராஜ் குஷ்வஹா மற்றும் கூலிப்படையினர் இந்த தம்பதியுடன் நண்பர்கள் போல பேசி சகஜமாக சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
பிறகு ரகுவை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கடுமையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். பிறகு சோனம் தன் காதலன் ராஜ் குஷ்வஹாவுடன் உத்தரப்பிரதேசம் தப்பி சென்றுவிட்டார். அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுன் கூலிப்படையைச் சேர்ந்த விக்கி தாகூர், ஆனந்த், ஆகாஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை தேடி வருகிறோம்." என்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications