மேகாலயாவில் மீண்டும் இந்தி திணிப்பு எதிர்ப்பு- ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி மிரட்டல்!
ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றியதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான வி.பி.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் ஆங்கிலத்தில் கட்டாயம் மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடு செய்ய வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் ஆளுநர் உரையை புறக்கணிப்போம் என விபிபி கட்சி அறிவித்துள்ளது.
மேகாலயாவில் என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார்.

மேகாலயாவில் கடந்த ஆண்டு புதிய அரசு பதவியேற்ற போது முதல் கூட்டத் தொடரில் மாநில ஆளுநர் பாகு சவுஹான் (பகு சவுகான்) இந்தியில் உரையாற்றினார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியில் ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான விபிபி தலைவர்கள், மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழிகளை 8-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். அஸ்ஸாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அஸ்ஸாம் மொழித் திணிப்பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவானது. இந்த நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் ஆளுநர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும்? என கொந்தளித்திருந்தனர். அத்துடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இப்போதே ஆளுநர் உரையை முன்வைத்து மேகாலயாவில் பிரச்சனை வெடித்துள்ளது. ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற கூடாது என மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது விபிபி கட்சி. அத்துடன் இந்தியில்தான் ஆளுநர் உரையாற்றுவார் எனில் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு மாநில அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும்; அப்படி ஆங்கில மொழி பெயர்ப்புக்கான ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால் வெளிநடப்பு செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது விபிபி கட்சி. அதே நேரத்தில் ஆளுநர் இந்தியில் உரையாற்றுவதில் தவறு இல்லை என்கிறது மேகலாயாவின் ஆளும் பாஜக கூட்டணி கட்சி. இதனால் இந்தி எதிர்ப்பு மேகங்கள் மேகாலயாவை சூழ்ந்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications