காங்., பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இணைந்த மீரா குமார், ஷிண்டே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என யூகிக்கப்படுவோர் பட்டியலில் சபாநாயகர் மீரா குமார், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் பெயரும் தற்போது அடிபடுகிறது.

லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி அறிவிக்கவில்லை.

காங்கிரஸில் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டாலும் ஏகப்பட்ட பிரதமர் வேட்பாளர் பெயர்களும் அவ்வப்போது அடிபட்டு வருகின்றன.

ப.சி, ஆண்டனி

ப.சி, ஆண்டனி

இந்தப் பட்டியலில் நம்மூர் ப.சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி என மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன.

நந்தன் நிலகேணி

நந்தன் நிலகேணி

இதைப் போலவே ஆதார் அடையாள அட்டை நாயகன் நந்தன் நிலகேனியின் பெயரும் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் மாநாடு

அடுத்த மாதம் மாநாடு

இந்நிலையில் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பிரதமர் வேட்பாளர் பெயர் அறிவிப்பது உறுதியாகி இருக்கிறது

மீரா, ஷிண்டே

மீரா, ஷிண்டே

இந்த சூழலில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களான சபாநாயகர் மீரா குமார், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரது பெயரும் தற்போது பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+