மேக்கேதாட்டு: கூட்டாட்சியை மதிக்காத தமிழகத்துடன் பேசிக் கொண்டிருக்க முடியாது- கர்நாடக அமைச்சர்
மேக்கேதாட்டு: கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா, நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளை கொந்தளிக்க செய்துள்ளது. "காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பு அணை கள் கட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மேக்கேதாட்டு திட்டத்தை நிறை வேற்றுவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டத் துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று சித்தராமையா தனது அறிவிப்பின்போது தெரிவித்தார்.

இதனால் தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தியடைந்துள்ள நிலையில், தமிழகத்துடன், இதுகுறித்து பேச்சுவார்த்தை கூட நடத்த முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்.
எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
கர்நாடக பட்ஜெட்டில் நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.12,956 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை கொண்டு வருவோம். காவிரியின் உபரிநீரை கர்நாடகா, முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக புதிய நீர்க் கொள்கைகள் வகுக்கப்படும். அதேநேரம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறியுள்ள அளவுப்படி, தமிழ்நாட்டுக்கு உரிய நீர் வழங்கப்படும்.
மேக்கேதாட்டுவில் புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல. தமிழக அரசியல் கட்சி கள், விவசாயிகளின் போராட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே மேகேதாட்டு திட்டம் குறித்து தமிழக அரசுடன் கர்நாடகா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. கர்நாடக எல்லைக்குள் மக்களின் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவது கர்நாடக அரசின் உரிமை. இதில் தமிழ்நாடு தலையிட முடியாது.
மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்ட வரைவு கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, மத்திய சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி, கிடைத்தவுடன் மேக்கேதாட்டுவில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்படும். அணையின் கட்டுமானப் பணிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் டெண்டர்கள் சமர்ப்பித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Karnataka water resource minister MP patil says, there will be no discussion between Karnataka and Tamilnadu regarding Mekedatu project.












Click it and Unblock the Notifications