எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள்... ராஜஸ்தானில் உள்ள வினோத கிராமம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்யும் வினோத வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள தேரசர் என்ற கிராமம் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக வினோத வழக்கம் ஒன்றை இந்த கிராமத்து ஆண்கள் கடைபிடித்து வருகின்றனர். அதாவது திருமணமான அனைத்து ஆண்களும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்தில் பின்பற்றப்படுவதாகவும், மூதாதையர் காலம் தொட்டு தொடர்ந்து வருவதாகவும் தேரசர் கிராம ஆண்கள் கூறுகின்றனர். இது மத ரீதியாக செய்யப்படும் திருமணம் இல்லை என்றும், மதங்களை கடந்த தங்கள் கிராமக்கலாச்சாரம் எனவும அவர்கள் தெரிவிக்கின்றனர். தேரசர் கிராமத்தில் திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் அனைவரும் இரண்டாவது திருமணமும் செய்ய வேண்டும் என்பது அந்த ஊரின் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

தேரசர் கிராமத்தில் இரண்டு திருமணங்கள் செய்வது இயல்பான ஒன்று என்பதால் அங்கு முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகள், சக்களத்தி சண்டைகள் எதுவும் இருக்காது என்பது இதில் குறிப்பிடத்தக்கது. மேலும், குடிநீருக்காக நாள்தோறும் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும், ஒரு மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ அவருக்கு பதில் மற்றொரு மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வார் எனவும் கூறுகின்றனர் பார்மர் மாவட்டத்தில் உள்ள தேரசர் கிராமத்தினர்.
ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோத வழக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications