டெல்லி வந்ததிலிருந்து ஹோட்டலிலேயே முடங்கியுள்ள மிஷல்.... சாப்பாடும் அங்கே தான்!
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் டெல்லியில் உள்ள மவ்ரியா ஹோட்டல் அறையிலேயே மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். இதையடுத்து பீஸ்ட் காரில் ஏறி ஒபாமாவும், மிஷலும் டெல்லியில் உள்ள ஐடிசி மவ்ரியா ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த ஒபாமா அங்கிருந்து கிளம்பி ராஷ்ட்ரபதி பவன் சென்றார். பின்னர் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஹைதராபாத் ஹவுஸ் சென்ற ஒபாமாவுக்கு மோடி மதிய விருந்து அளித்துள்ளார். விருந்தின்போது அவர்கள் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் மிஷல் டெல்லி வந்ததில் இருந்து ஹோட்டல் அறையிலேயே உள்ளார். மதிய உணவு கூட அவரது அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியா வந்தபோது மிஷல் ஒபாமாவுடன் சேர்ந்து ராஜ்காட் சென்றார். இம்முறை அவர் செல்லவில்லை.
டெல்லி வந்ததில் இருந்தே ஹோட்டலில் முடங்கியுள்ளார் மிஷல். ஒபாமா, மிஷலின் வருகையையொட்டி ஹோட்டலில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications