Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடி பிலிவர் அடி.. நடுவானில்.. விமானத்தில் சண்டை போட்ட இந்தியர்கள்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நடுவானில் பறக்கும் விமானம் ஒன்றில் இந்தியர்கள் சண்டை போட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி அந்த தாய்லாந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் ஆகும் இது.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இரண்டு இந்தியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ஒரு இந்தியர் தன்னுடைய பேக்கை நடைபாதையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை இன்னொருவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில்தான் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி இந்தியில் கத்தி சண்டை போட்டுள்ளனர். ஒருவர் இன்னொருவரை ஏ நீ அமைதியாக இரு என்று கூறி இந்தியில் கத்தி இருக்கிறார். இன்னொருவர் நீ கீழே உட்காரு என்று கூறி கத்தி இருக்கிறார். இவர்கள் இருவரும் போக போக கெட்ட வார்த்தையில் மாறி மாறி கத்தி இருக்கின்றனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதில் ஒரு நபருக்கு உதவியாக அவரின் நண்பர்கள் வந்ததும் மோதல் கைமீறி சென்றுள்ளது. மூன்று பேர் சேர்ந்து கொண்டு ஒருவரை சரமாரியாக திட்டி உள்ளனர். பதிலுக்கு இந்த நபரும் மாறி மாறி கடுமையாக திட்டி உள்ளார். இதையடுத்து விமான பணிப்பெண் ஒருவர் வந்து இவர்களை சமாதானம் செய்ய முயன்று உள்ளார். இரண்டு பேரையும் அமைதிப்படுத்த முயன்று உள்ளனர். உட்காருங்கள், உட்காருங்கள்.. நான் பிரச்னையை சரி செய்கிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் இவர்கள் விமான பணிப்பெண்ணை கண்டுகொள்ளாமல் மாறி மாறி கத்தி உள்ளனர்.

சண்டை

சண்டை

இந்த விவகாரம் கைமீறி போகவே ஒருவர் இன்னொருவரை போட்டு சரமாரியாக அடித்துள்ளார். இன்னொரு நபர் திருப்பி அடிக்காமல் தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் இவர் விடாமல் அந்த நபரை போட்டு சரமாரியாக தாக்கி உள்ளார். அவரின் நண்பர்களும் அவருடன் சேர்ந்து கொண்டு விடாமல் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். நடுவில் விமான பணிப்பெண் இவர்களை தடுக்க கடுமையாக முயன்றும் முடியவில்லை. இன்னொரு விமான பணிப்பெண் இந்த மோதலை விமானிக்கு தகவலாக போன் மூலம் தெரிவித்து உள்ளார்.

சரமாரி தாக்குதல்

சரமாரி தாக்குதல்

இவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டு சண்டை போட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த சண்டை குறித்து தாய் ஸ்மைல் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. சண்டை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. சமீபத்தில் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவரை பயணி திட்டிய சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் ஆண் பயணி ஒருவர் கேட்ட உணவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கேட்ட உணவு மெனுவில் இல்லை. இதையடுத்து அவருக்கு முன்னாள் இருக்கும் திரையில் உள்ள உணவை தேர்வு செய்யும்படி அந்த பயணியிடம் விமான பணிப்பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி.. விமான பணிப்பெண்ணிடம் கையை நீட்டி கத்தி இருக்கிறார். இதற்கு அந்த பணிப்பெண் அழுதுகொண்டு பணிப்பெண்கள் இருக்கும் முன்புற அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

இதையடுத்து பணிப்பெண் குழுவை சேர்ந்த மூத்த ஹோஸ்ட் அங்கே வந்த அந்த ஆணை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். நீங்கள் எப்படி விரலை நீட்டி பேசலாம். எப்படி கத்தி பேசலாம். உங்களால் என்னுடைய டீம் அங்கே அழுதுகொண்டு இருக்கிறது. நீங்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். உணவு கார்டில் இருப்பதைதான் கொடுக்க முடியும். விமானத்தில் அவர்கள் பல உணவுகளை ஏற்றி உள்ளனர். அதில் இருந்துதான் கொடுக்க முடியும். நீங்கள் போர்டிங் செய்த போது தேர்வு செய்த உணவைதான் எங்களால் கொடுக்க முடியும், என்று கூறியுள்ளார். இவர்கள் மாறி மாறி வாக்குவாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+