பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்- மோடி மிரட்டல்?
டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து தமக்கு நெருக்கடி கொடுத்து வந்தால் பிரதமர் பதவியை தாம் ராஜினாமா செய்துவிடுவேன் என்று சங்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக இந்துத்துவா அமைப்புகள் ராமர் கோவில் கட்டியே தீருவோம்; மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; நாடு முழுவதும் கோட்சேக்கு சிலை அமைப்போம் என்றெல்லாம் தொடர்ந்தும் பேசுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதும் தொடர் கதையாகி வருகின்றன.

மத்திய அமைச்சர்கள், இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்து வரும் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாடாளுமன்றம் அமளிக்காடாக முடங்கிப் போய் கிடக்கிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்துத்துவா தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நோக்கமே நல்ல நிர்வாகத்தைத் தருவதுதான்.. ஆனால் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி அந்த நோக்கத்தை சீர்குலைக்கிறீர்கள் என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
மேலும் அரசை சுதந்திரமாக இயங்க விடாமல் தடுத்தால் ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன். மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதே வளர்ச்சி மற்றும் நல்ல அரசு நிர்வாகத்துக்குத்தான்.. ராமர் கோவில் கட்டுவது போன்ற பிரச்சனைகளை விட நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதுதான் முக்கியமானதாகும் என்றும் கூறியிருக்கிறார் மோடி.
கடந்த வாரம்தான் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்; லட்சுமண ரேகையை மீறக் கூடாது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications