மிக் 27 போர் விமானம் விழுந்து நொறுங்கியது.. பைலட் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் மிக் 27 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

பார்மர் நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் விமானம் விழுந்தது. அதற்கு முன்னதாக பாராசூட் மூலமாக விமானி கீழே குதித்து உயிர் தப்பினார்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications