Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈவ் டீசிங் செய்தவனை செருப்பால் அடித்த ஜிஷா... பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரன்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஈவ் டீசிங் செய்ததற்காக செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால் பழிக்கு பழியாக சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து வாயில் மதுவை ஊற்றியுள்ளான் கொலைகாரன் அமீருல் இஸ்லாம்.

கேரளா மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் படுகொலைக்கு காரணமாக கொலையாளியை இரு தினங்களுக்கு முன் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜிஷாவின் உடலில் 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தண்ணீர் கேட்டு கதறிய மாணவியின் வாயில் மதுவை ஊற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Migrant worker from Assam killed Jisha, murder weapon found

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, 31. கடந்த ஏப்ரல் மாதம் 28ம்தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது.

தலித் மாணவியான ஜிஷா கொலை கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது.

மாணவி ஜிஷா கொலை தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்தது. அவரது தலைமையிலான அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம், 23 என்ற கட்டிட தொழிலாளியை காஞ்சீபுரத்தில் வைத்து வியாழக்கிழமையன்று கைது செய்தனர்.

மாணவி ஜிஷா கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி சிக்கியது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மாணவி ஜிஷா துணிச்சல் மிக்கவர். அந்த பகுதியில் யாராவது தகராறில் ஈடுபட்டாலோ அல்லது தன்னிடம் வம்பு செய்தாலோ அதை தட்டிக்கேட்பார், சில நேரங்களில் அடிக்கவும் செய்வாராம். அவரது இந்த துணிச்சலே அவருக்கு விரோதிகளை சம்பாதித்து கொடுத்தது.

ஜிஷாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் அமீருல் இஸ்லாம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜிஷாவின் வீட்டில் நடந்த கட்டுமான பணியின்போது முதல் முறையாக ஜிஷாவை பார்த்துள்ளார். அப்போதே அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, பேசியுள்ளான்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிஷாவிடம் ஆபாசமாக பேசியுள்ளான் அமீருல், அதற்கு ஜிஷாவும் பதிலடி கொடுப்பாராம். குளத்தில் குளிக்க சென்றபோது ஜிஷாவிடம் சில்மிஷம் செய்ய முயன்றதால் பலர் முன்னிலையில் அமீருல் இஸ்லாமை செருப்பால் அடித்துள்ளார் ஜிஷா. இதனால் ஏற்பட்ட அவமானத்திற்கு பிறகு அமீருல் இஸ்லாம் அந்த பகுதியில் தலைகாட்டவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் ஜிஷாவின் வசித்த வீடு அருகே நடந்த கட்டிட பணிக்காக மீண்டும் அமீருல் இஸ்லாம் அங்கு வந்துள்ளான். மீண்டும் ஷிஜாவை பார்த்ததும், மீண்டும் அவரிடம் தனது வேலையை காட்டி உள்ளார். உடனே ஜிஷா தனது செருப்பை கழற்றி காட்டி அவரை எச்சரித்தாராம்.

ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற அமீருல் இஸ்லாம் மது கடைக்கு சென்று மது அருந்திவிட்டு ஜிஷாவின் வீட்டு அருகே சென்று நோட்டமிட்டுள்ளார். அப்போது வீட்டில் ஷிஜா மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே வீட்டுக்குள் புகுந்த அவர், ஜிஷாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஜிஷா அவரை எதிர்த்து போரடவே, தன்னிடமிருந்த கத்தியால் அமீருல் இஸ்லாம் ஜிஷாவை சரமாரியாக குத்தினார். அவரது மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜிஷா தண்ணீர் கேட்டு கதறி உள்ளார். ஆனால் அப்போதும் மனம் இரங்காத அமீருல் இஸ்லாம் தன்னிடம் இருந்த மது பாட்டிலை திறந்து மதுவை ஜிஷா வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஜிஷாவை கொடூரமாக பலாத்காரம் செய்த அந்த கொடூரன், ஜிஷா இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.

கொலையாளி அமீருல் இஸ்லாம் இந்த கொடூர செயலை செய்த பிறகு ஜிஷாவின் வீட்டில் இருந்து வெளியேறிய போது வீட்டு வாசலில் இருந்த சேற்றில் அவனது செருப்புகள் சிக்கிக் கொண்டது. இதனால் அவற்றை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டான்.

இந்த கொலை பற்றி துப்பு துலக்கிய ஏ.டி.ஜி.பி. சந்தியா, தலைமையிலான போலீசாருக்கு இந்த செருப்புதான் முக்கிய துப்பாக உதவியது. அந்த செருப்பில் ரத்தக்கறை இருந்ததாலும் சிமெண்ட் கலவை படித்திருந்ததாலும் அதன் மூலம் விசாரணையை தொடங்கினர்.

அந்த செருப்பை வாங்கியது யார்? என்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, அமீருல் இஸ்லாம் பற்றி தெரிய வந்தது. செருப்பில் இருந்த ரத்தக்கறை மாணவி ஜிஷாவின் ரத்தம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அக்கம் பக்கத்தினர் கூறிய அடையாளங்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவம் மூலம் கொலையாளியை கம்ப்யூட்டர் படம் வரைந்து அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து கொலையாளியை போலீசார் கைது செய்துவிட்டனர்.

தற்போது அமீருல் இஸ்லாமிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஜிஷாவை கொல்ல பயன்படுத்திய கத்தியை கண்டுபிடித்துள்ள போலீசார், கொலை நடந்த ஜிஷாவின் வீட்டிற்கு கொலையாளியை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+