எப்புட்றா? குஜராத்தில் 5 ஆண்டில் டபுள் ஆன கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை! பிரதமர் மோடி மாநிலமாச்சே
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வாழும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49% அதிகரித்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத். வைர வியாபாரம், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை, சூரத் துணி வியாபாரம் என பல தொழில்கள் அங்கு கொடிகட்டிப் பறக்கின்றன. அதிக ஜிடிபி கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈடுவோர் பட்டியலை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சிபிடிடி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த 2021 - 22 ஆம் நிதியாண்டில் குஜராத்தை சேர்ந்த 9,300 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியதாக தங்களுடைய வருமான வரி படிவத்தை குறிப்பிட்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த 2022 - 23 நிதியாண்டில் குஜராத்தை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த வருமான வரி படிவத்தின் அடிப்படையில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியவர்கள் எண்ணிக்கை 4,500 என்ற அளவில் அதிகரித்து 13,800 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை 7,000 என்ற அளவில்தான் இருந்தது. ஆனால், தற்போது 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து இருக்கிறது. அதேபோல் கார்ப்பரேட் நிறுவன பிரிவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்களாகி உள்ளார்கள்.
கடந்த 2021 - 22 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவன கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், 2022 - 23 நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்து 4,700 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோன்று குஜராத் மாநிலத்தில் கடந்த 2021 - 22 நிதியாண்டில் வருமான வரி செலுத்திய தனிநபர்களின் எண்ணிக்கையும் 71.2 லட்சமாக இருந்த நிலையில், 2022 - 23 நிதியாண்டில் இது 73.8 லட்சமாக அதிகரித்து உள்ளது. இது 4% உயர்வு என அந்த சிபிடிடி கூறியுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications