மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியிலும் போட்டியிட அசாதுதீன் ஓவைஸியின் மஜ்லீஸ் கட்சி திட்டம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலிலும் மஜ்லீஸ் கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில்தான் அசாதுதீன் ஓவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் எ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.

அண்மையில் மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் இக்கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலிலும் களமிறங்க மஜ்லீஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. டெல்லி மத்தியா மஹால் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஷோஹிப் இக்பாலை இழுக்கும் முயற்சியில் மஜ்லீஸ் கட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள சிறுபான்மை வாக்குகளை குறி வைத்து மஜ்லீஸ் கட்சி களமிறங்கினால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications