தேசியக்கொடி ஏற்றிவிட்டு மேடைக்கு போனதும் சரிந்து விழுந்த அமைச்சர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்னாச்சு?
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது சுகாதார அமைச்சர் பிரபுராம் சவுத்ரி மற்றும் சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கவுதம் ஆகியோர் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். அந்தந்த மாநிலங்களில் மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினர்.

மேலும், மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தேசியக்கொடி ஏற்றினர். அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த விழாவில் தேசியக்கொடி ஏற்றிய அமைச்சர் பிரபுராம் சவுத்ரி, பின்னர் உரையாற்றியபோது திடீரென மயங்கி, நிலைதடுமாறி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த அதிகாரிகளும், நிர்வாகிகளும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அமைச்சர் பிரபுராம் சௌத்ரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீரானது. ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அமைச்சர் பிரபுராம் சௌத்ரி நலமுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல, மத்திய பிரதேசத்தின் மௌகஞ்சில் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கிரிஷ் கௌதம் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் மேடையில் உரையாற்றும்போது நிலை தடுமாறினார்.
அப்போது சுதாரித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை தாங்கிப் பிடித்து நாற்காலியில் அமர வைத்தனர். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு, சபாநாயகர் கிரிஷ் கவுதமுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications