ஒரு வாரத்தில் 4 பேரைக் கொன்ற புலியை சுட்டுத் தள்ள அமைச்சர் உத்தரவு
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் புலி தாக்கி ஒரு வாரத்தில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹெச்.டி. கோட்டே தாலுகாவில் உள்ளது சிக்கபர்கி காடுகள். இந்த காட்டுப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் புலி தாக்கி 2 பேர் பலியாகினர். மேலும் கடந்த சனிக்கிழமை நாகர்ஹோலே காட்டுப்பகுதியில் ஒருவர் புலி தாக்கி உயிர் இழந்தார்.

இந்நிலையில் பசப்பா(55) என்ற விவசாயி தனது கால்நடைகளை பந்திபூர் புலிகள் சரணாலயம் அருகில் உள்ள ஹெடியாலா வனச்சரகப் பகுதிக்கு நேற்று மாலை அழைத்துச் சென்றார். அப்போது அவர் புலி தாக்கி பலியானார். அவரது குடும்பத்தாருக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு அறிவித்துள்ளது.
பசப்பாவை கொன்ற புலி தான் சீகேவடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான செலுவா மற்றும் நதாதிஹாடியைச் சேர்ந்த பசவராஜ் ஆகியோரையும் கொன்றது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பந்திபூர்-நாகர்ஹோலே பகுதியில் 180 புலிகள் உள்ளன. இந்த பகுதியைச் சுற்றி 300 கிராமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பேரின் உயிரை எடுத்த அந்த புலியை கண்டதும் சுட்டுக் கொல்ல கர்நாடக மாநில வனத் துறை அமைச்சர் ராமநாத் ராய் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் புலி தாக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications