சசிகலா, தினகரனை நம்பி நாங்க இல்லைங்க - ஜெயக்குமார் பொளேர்
சசிகலா, தினகரனைச் சார்ந்து தமிழக அரசு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கூறியுள்ளார்.
டெல்லி : சசிகலா மற்றும் தினகரனைச் சார்ந்து தமிழக அரசு இல்லை. எங்கள் ஆட்சி அம்மாவின் வழியில் தனித்து இயங்குகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், டிடிவி தினகரன் நிர்வாகிகள் நியமனம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், டிடிவி. தினகரன் கட்சியில் குழ்ப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறினார்.
யாரை நம்பியும் நாங்கள் இல்லை. முக்கியமாக சசிகலா, தினகரனை நாங்கள் இல்லை என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

அண்ணன் ஓபிஎஸ்
ஆளும் அதிமுக அரசு ஜெயலலிதா வழியில் தொடர்கிறது. இது அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் தெரியும். எனவே அவர் விரைவில் வந்து இணைவார். ஒன்றிணைந்து ஆட்சியை தொடருவோம்.

யாரை நம்பியும் இல்லை
சசிகலா, தினகரனை நம்பி எடப்பாடி பழனிச்சாமி அரசு இல்லை. சசிகலா, தினகரன் தொடர்பை தவிர்த்துவிட்டு தாங்கள் சுயமாக செயல்படுவோம். ஜெயலலிதாவின் ஆட்சியையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர்கிறது என்றும் கூறினார்.

மக்கள் விரும்பவில்லை
சசிகலா தலைமையை அதிமுகவினர், பொதுமக்கள் விரும்பவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் நடைபெறுகிறது. அணிகள் ஒன்றுபட்டு ஆட்சி தொடரும் என்றார்.

கருத்து சொல்ல முடியாது
பொதுச்செயலாளர் பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பதில் கூற முடியாது என்று கூறினார்.

தினகரன் நியமனம்
முன்னதாக ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முன் சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் நியமனமே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கையில் உள்ளது. அப்படி இருக்கையில் பொதுச்செயலாளர் சசிகலா நியமித்த தினகரனின் நியமனம் எப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications