தேசிய கொடி ஏற்றியபோது செருப்பை மாட்டிவிட பாதுகாவலருக்கு உத்தரவிட்ட ஒடிஸா அமைச்சர்!
புவனேஸ்வர்: ஒடிஸாவில் சுதந்திர தின நிகழ்சியில் தேசிய கொடி ஏற்றும் போது அமைச்சர் ஜோகேந்திர பெஹெராவுக்கு அவரது பாதுகாவர் செருப்பை சரிசெய்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநில சிறு, குறுந்தொழில் துறை அமைச்சர் ஜோகேந்திர பெஹெரா நேற்று கெயோஞ்ஜர் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்சியின் போது, ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

அப்போது அமைச்சரின் செருப்பை அவரது பாதுகாப்பு அதிகாரி மாட்டிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான காட்சிகள் தொலைக் காட்சிகளிலும் வெளியாது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து பின்னர் ஜோகேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் ஒரு விஐபி, நான் தான் தேசியக்கொடி ஏற்றினேன், அதனால் அவர் அதைச் செய்தார்; எனக்கு முழங்கால் காயம் இருக்கிறது. எனவே தான் எனது பாதுகாவலர் எனக்கு உதவி செய்தார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமைச்சரின் செயல் மற்றும் அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஜோகேந்திர பெஹெராவிற்கு எதிராக மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக புவனேஸ்வரில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தவறாக மதுசூதன் என்ற பிரபல வழக்கறிஞர் ஒருவரை சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டுவிட்டதும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications