இங்கிலாந்து ராணியுடன் கைகுலுக்க வேண்டுமா? ரூ.1 லட்சம் ! அமைச்சருடன் செல்பி எடுக்க வேண்டுமா ? ரூ.10
போபால்: மத்திய பிரதேசத்தில் தன்னுடன் கைகுலுக்கி செல்பி எடுக்க 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது. சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய் ஷா. இவர் தன்னுடன் கைகுலுக்கி செல்பி எடுக்க 10 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரது இந்த அறிவிப்பு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நான் ஏன் அப்படி கூறினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் எனது தந்தையான தேவி ஷா பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு நிதி சேர்க்கவே இந்த முடிவை எடுத்தேன்' என்றார்.
இந்த யோசனை எப்படி தங்களுக்கு வந்தது என்று கேட்டதற்கு, இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் யாராவது கைலுக்கி வாழ்த்து சொல்ல வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். நான் ஒருமுறை இங்கிலாந்து பயணத்தின் போது ஒரு லட்சம் கொடுத்து ராணியுடன் கைகுலுக்கி்க் வாழ்த்துத் தெரிவித்தேன். இதுதான் 10 ரூபாய் வசூலிக்க முக்கிய காரணமாக இருந்தது என்று விவரித்தார்.
இருந்தாலும் எதிர்கட்சியான காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் அமைச்சரின் கருத்தை ஏற்கவில்லை. மேலும், பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பச்சான் உள்பட பலர் பிரபலமடைய மலிவான விளம்பர வித்தையே காரணம் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் பூபேந்தர் சிங் அமைச்சர் விஜய் ஷாவுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications