அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டு வராம நான் ஓடியா போனேன்? ஆனா ரஜினி.. அமைச்சர் ரோஜா விமர்சனம்
நகரி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கே வரவில்லை. அவர்எதற்காக அரசியல் பேசுகிறார் என நடிகையும் அமைச்சருமான ரோஜா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் அமைச்சர் ரோஜாவை கடுமையாக சாடி வருகிறார்கள். நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் என்.டி.ராமாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். பிறகு என்டி ராமாராவின் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசினார்.
ரஜினிகாந்த் பேசுகையில் சந்திரபாபு நாயுடுவுடன் பேசும் போது அறிவு தானாக அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். சந்திரபாபு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை என்றாலே என்னவென விழிப்புணர்வு இல்லாத சமயத்தில் அந்த துறை குறித்து புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஹைதராபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விஷன் 2020 என்ற திட்டத்தை அமல்படுத்தினார். அவருடைய முயற்சியின் காரணமாக ஐடி நிறுவனங்கள் மட்டும் சர்வதேச புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஹைதராபாத்தில் தொடங்கின. இதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. விஷன் 2047 என்ற திட்டத்துடன் 2047 ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போதும் சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இதற்கு நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜா செல்வமணி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் ஜீரோ என காட்டமாக விமர்சித்துள்ள நடிகை ரோஜா, புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்ற புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் நடிகர் ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் அரசியல் குறித்து அவர் பேசக் கூடாது. கடவுளாகப் பார்த்த என்.டி.ராமாராவுக்காக நடத்தப்பட்ட விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரிந்தே தவறாக ரஜினி பேசியது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
என்.டி.ஆரை கொலை செய்ய திட்டம் போட்டவர்களை நல்லவர் என சொன்னது மட்டுமின்றி மேலே இருந்து சந்திரபாபுவை என்.டி.ஆர் ஆசிர்வாதம் செய்வார் என ரஜினிகாந்த் பேசியது மிகவும் தவறானது. ரஜினி இப்படி பேசியதால் என்.டி.ஆர். ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளனர். ஆந்திர அரசியல் தெரியாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த ஸ்கிரிப்ட்டை ரஜினி படிப்பது சரியானதாக இருக்காது. ரஜினி பேசியதால் இன்று அவர் ஜீரோவாகியுள்ளார்.
பிற மாநில அரசியல் தெரியாமல் இருக்கும் போது தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு குறித்து பேசியது தொடர்பாக ரஜினி அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆந்திராவில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார். சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண், ரஜினிகாந்த் என யார் வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிக்குத்தான் வெற்றி கிடைக்கும். இவ்வாறு நடிகை ரோஜா பேசியிருந்தார்.
இதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்திருந்தார். உலகமே வியந்து பார்க்கும் ரஜினிகாந்தை இப்படி தராதரம் இல்லாமல் பேசுவது தவறு. எனவே நடிகை ரோஜா போன்றோர் இப்படி பேசுவதை ஜெகன் மோகன் ரெட்டி கண்டிக்க வேண்டும். உடனடியாக ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினி குறித்து நடிகை ரோஜா பேசியதால் ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்து ரோஜாவை சமூகவலைதளங்களில் ஆவேசமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ரோஜா மற்றொரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்... என சொல்லிவிட்டு வராம ஓடியா போனேன்? ரஜினி அரசியலுக்கே வரவில்லை. எதற்காக அவர் அரசியல் பேசுகிறார் என ரோஜா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications