ஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்!
ஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீர்களா என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் பாதல் ராகுலை கேள்வி எழுப்பினார்.
டெல்லி: ஏதாவது போதை வஸ்துக்களை சாப்பிட்டீர்களா என மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் ராகுலை கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத நிலையில் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநில எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதுதான் ஹாட்டாப்பிக்காக இருந்தது.

சிரிப்பில் உண்மை
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அவர் என் கண்ணை பார்த்து பேசுவதில்லை. அவரது சிரிப்பில் உண்மை இல்லை.

அமளி
பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ராகுலை தட்டிக் கொடுத்தார்
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்தார்.

அகாலி தளம்
இதை சற்று எதிர்பாராத மோடி உள்பட ஆளுங்கட்சியினர் வரவேற்றனர். ராகுல் காந்தியின் பேச்சை ஆளுங்கட்சியினரும் வரவேற்றதாக ராகுல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடியை ராகுல் அணைத்தது குறித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் பாதல் (அகாலி தளம்) பேசினார்.

முன்னா பாய் எம்பிபிஎஸ்
அவர் கூறுகையில் ராகுல் காந்தி இது நாடாளுமன்றம், முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் வரும் ஹீரோ போல் ராகுல் கட்டி பிடி வைத்தியம் செய்கிறார். பஞ்சாப் மாநிலத்தவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்.

எந்த வஸ்து
ராகுல் அவர்களே நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் எந்த போதை வஸ்துவை சாப்பிட்டுவிட்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications