குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனே மாவட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்ற 3 பேர் வயல் வெளியில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது.

இந்த நிலையில் ஹாத்ராஸ் அருகே பல்ராம்பூரில் 22 வயது தலித் சிறுமி மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற சம்பவம் என நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

3 பேர் கொண்ட கும்பல்

3 பேர் கொண்ட கும்பல்

உத்தரப்பிரதேசத்தில் அசாம்கார், புலந்த்ஷார் பகுதியிலும் இரு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். அது போல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கார்கோனே மாவட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

3 பேர்

3 பேர்

கார்கோனே மாவட்டத்தில் மருகார் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி. அவர் வயல்வெளியில் ஒதுக்குப்புறமாக உள்ள குடிசை வீட்டில் தனது சகோதரனுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அந்த சிறுமியின் குடிசைக்கு சென்றனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

அங்கிருந்து அந்த சிறுமியை தூக்க முயற்சித்தனர். அப்போது அந்த சிறுமி கண் விழித்து விட்டதால் அவர் வர மறுத்துள்ளார். இதையடுத்து உடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனும் எழுந்து அந்த நபர்களை தடுத்துள்ளான். ஆனால் அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

3 பேருக்கு வலைவீச்சு

இதனிடையே அந்த சிறுவன் ஓடிச் சென்று கிராமமக்களை அழைத்தான். இதையடுத்து மூவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் வந்த வாகனங்களும் திருட்டு வாகனம் என்பதால் அந்த 3 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+