6ம் வகுப்பு மாணவியை சீரழித்த தலைமையாசிரியர்.. பீகாரில்
Subscribe to Oneindia Tamil
கயா: பீகாரில் 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள சந்தவுடி பகுதியில் ஆர்யன் பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை, அப்பள்ளித் தலைமையாசிரியரே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் தலைமையாசிரியர் மீது போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தலைமையாசிரியரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications