வடகிழக்கு மாநில உடையை அணிந்தால் கிண்டல் செய்கிறார்கள்.. மிசோரம் பிரச்சாரத்தில் மோடி பேச்சு!
வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்கிறது என்று மிசோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஐசால்: வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்கிறது என்று மிசோரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இன்னும் தெலுங்கானா, மத்திய பிரதேம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இதில் மிசோரம் தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக மிகவும் தீவிரமாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தல் காரணமாக மிசோரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மிசோரம் மாநிலம் லாங்லெய் பகுதியில் பிரச்சாரம் செய்தவர் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

நன்மைகள்
அதில், கடந்த நான்கு வருடங்களில் பாஜக அரசு வடகிழக்கு மாநிலத்திற்கு நிறைய நன்மைகளை செய்தும் இருக்கிறது. உங்கள் கலாச்சாரத்தை நாங்கள் பெரிய அளவில் மதித்து இருக்கிறோம். உங்களது கலாச்சாரத்தை பாஜக உலகறியச் செய்துள்ளது.

காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது. உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது. காங்கிரஸ் உங்களது கலாச்சாரத்தை கிண்டல் செய்வதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் வடகிழக்கு மாநில மக்களின் உடையை அணிந்தால் கிண்டல் செய்கிறார்கள்.

கிண்டல்
அது என்னை கிண்டல் செய்வது கிடையாது. உங்களை கிண்டல் செய்வது. உங்களது உடை காங்கிரஸ் கட்சிக்கு கேலிப்பொருளாக உள்ளது. உங்களை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்யும் போது பெரிய அளவில் எனக்கு கோபம் வருகிறது.

முன்னேற்றியது
வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றியது நாங்கள்தான். உங்களுக்கு இன்னும் சாலை வசதி, ரயில் வசதி, விமான வசதி, மருத்துவ வசதி அதிகம் ஏற்படுத்திக் கொடுப்போம். உங்களது முன்னேற்றம்தான் இந்தியாவின் முன்னேற்றம் என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications