மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு.. காரணம் இதுதான்!
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரமில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். அங்கு தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மிசோரம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மிசோரம் தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள். மிசோரம் தேர்தலுக்காக மொத்தம் 1276 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பணியில் சுமார் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மிசோரம் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 50 கம்பெனிகள் துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டனர்.
மிசோரமில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8,51,895 ஆகும். இவர்களில் ஆண்கள்- 4,38,925 (51.3%); பெண்கள்- 4,12,969 (48.7%). லாங் திலாய் மாவட்டம் துய்சிங் தொகுதியில் அதிகபட்சமாக 36,042 வாக்காளர்கள். மிக குறைந்தபட்சமாக லுங்லேய் மாவட்டம் தோரங் தொகுதியில் 14,909 பேர் வாக்காளர்கள் உள்ளனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 80.43 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதனிடையே, மிசோரமில் உள்ள ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முல்லுங்து என்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக சோதனைக்காக நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவு தரவுகளை அழிக்க வாக்குச்சாவடி ஊழியர்கள் மறந்து விட்டனர். இதனால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தற்போது வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் முல்லுங்து வாக்குச்சாவடி ஐஸ்வால் தெற்குIII தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிசோ தேசிய முன்னணி, மிசோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications