இன்னும் 5 நாள்தான்... மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரி தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்தி அம்மாநில தேவாலயங்களில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. டெல்லியில் முகாமிட்டுள்ள மிசோரம் என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகள் நாளை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்த உள்ளனர்.
மிசோரம் மாநிலத்தின் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகின.

மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலா தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் மிசோரம் மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள்,என்ஜிஓ அமைப்புகள், டிசம்பர் 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவர்களின் புனித நாள். அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையை நடத்தாமல் வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இருந்த போதும் இதுவரை தேர்தல் ஆணையம், டிசம்பர் 3-ந் தேதிதான் வாக்கு எண்ணிக்கை என்பதில் உறுதியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து மிசோரம் மாநில என்.ஜி.ஓக்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் நாளை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
இதனிடையே மிசோரம் மாநிலத்தின் 15-க்கும் மேற்பட்ட தேவாலயங்களின் கூட்டமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் மிசோரம் மாநிலம் முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி இந்தப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய சாத்தியம் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். இதனால் மிசோரம் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படுமா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications