Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் வாக்காளர்கள் vs பெண் வேட்பாளர்கள்! மிசோரம் தேர்தல் சொல்வதென்ன? வெளியான ஷாக் புள்ளி விவரம்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இம்மாநிலத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.

Mizoram has more female voters than male voters but the number of female candidates is less

பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் எத்தனை சதவிகிதம் வாக்ககுகள் பதிவாகின? அதில் ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு? பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

மிசோரம் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெண்களின் பங்கு 81.25 சதவிகிதம் ஆகும். அதே நேரத்தில் ஆண்களின் வாக்கு சதவிகிதம் 80.04 சதவிகிதம் ஆகும். மாநிலத்தில் மொத்தம் பதிவான வாக்கு சதவிகிதமான 80.66 என்பதை விட ஆண்களின் வாக்கு சதவிகிதம் குறைவாக உள்ளது. பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகம் இருந்தாலும் மொத்த பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 15 என்பது கவனிக்கத்தக்கது. மிசோரத்தில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 174 ஆகும்.

மிசோரமில் மொத்தம் 8.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80.66% பேர் வாக்களித்துள்ளனர். இதில் 81.25% பேர் பெண்கள். ஆண்களின் எண்ணிக்கை 80.04% மட்டுமே. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஒட்டுமொத்தமாக மாநில அளவில் வாக்குப்பதிவு சராசரி என்பது 80.66 ஆக இருக்கிறது. அப்படியெனில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவின் சராசரியை விட குறைவான அளவில் ஆண்களின் வாக்குப்பதிவு இருக்கிறது என்பதுதான்.

அதேபோல மாநிலம் முழுவதும் களமிறங்கிய 175 வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15தான். இது மொத்த வேட்பாளர்களில் 10 சதவிகிதம் கூட கிடையாது. பெண்கள் அதிகம் வாக்களிக்கும் மாநிலத்தில், பெண் வாக்காளர்கள் 10 சதவிகிதம் கூட இல்லாதது பேசு பொருளாகியுள்ளது. மொத்தமுள்ள பெண் வேட்பாளர்களில் 3 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா இருவர் போட்டியிட்டுள்ளனர். மீதமுள்ளவர் சுயேட்சை வேட்பாளராவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+