என்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராவ் கோதாவரி மாவட்டத்தில் கோவில் கட்டி வருகிறார். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டுவதை தாண்டி, மக்களிடம் தெய்வாக வாழ்பவர்களுக்கு கோயில்கள் கட்டப்பட்ட வரலாறு உண்டு. ஏன் நடிகர் நடிகைகளுக்கு கூட கோயில்கள் கட்டப்பட்டது உண்டு. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில அரசியல் தலைவர்களுக்கும் கோயில்கள் நாட்டில் கட்டப்பட்டுள்ளது.

MLA to build a temple for Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy

இந்நிலையில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) வெங்கட்ராவ் கோயில் கட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் அருகே ராஜம்பாளையத்தில் தொகுதி எம்எல்ஏ வெங்கட்ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட நேற்று பூமி பூஜை நடத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு கேட்காமலேயே உதவிகளை செய்து வருகிறார். மக்களுக்கு உதவி செய்யும் முதல்வருக்காக கோயில் கட்டுவதாக எங்கள் தொகுதியில் உள்ள ராஜம்பாளையம் பகுதியில் அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. விரைவில் கோயில் கட்டப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+