ஆந்திராவைப் பிரிக்காதீர்கள்... மத்திய அமைச்சர் காலில் விழுந்து கெஞ்சிய 20 எம்.எல்.ஏக்கள்
டெல்லி: ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என வலியுறுத்தி 20 எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்ததால் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்தான வரைவு மசோதாவை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்தான் வரைவு மசோதாவை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போதும், அங்கு வந்த தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காலில் விழுந்தனர். எம்.எல்.ஏ.க்கள் திடீரென காலில் விழுந்ததை பார்த்து அவர் திகைப்படைந்தார்.
காலில் விழுந்த எம்.எல்.ஏக்கள் ‘தயவு செய்து ஆந்திராவை காப்பாற்றுங்கள். தெலுங்கானாவை பிரிக்க வேண்டாம், தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார்கள்.
தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாவலர்கள் ஜெய்ராம் ரமேஷை, எம்.எல்.ஏக்கள் மத்தியில் இருந்து மீட்டு பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.
எம்.எல்.ஏக்கள் காலில் விழுந்த அதிர்ச்சியில் இருந்து அங்கிருந்தவர்கள் மீள்வதற்குள், மத்திய அமைச்சர் நாராயணசாமி காருக்கு முன் ஒரு எம்.எல்.ஏ. தரையில் படுத்து உருண்டார். அப்போது சில எம்.எல்.ஏ.க்கள் அவரது காரின் மேல் இருந்த சிவப்பு விளக்கை சேதப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக ஆந்திர எம்.எல்.ஏ கேசவ் கூறும்போது, ‘ஆந்திர சட்டசபை ஒப்புதல் இல்லாமல் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் வைப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது' என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications