மகாராஷ்டிராவில் வேலை..ஆனா மராத்தி தெரியாதா? ரயில்வே பெண் அதிகாரியை மிரட்டிய ராஜ்தாக்கரே அடிப்பொடிகள்
மும்பை: ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெறுவதற்காக மராத்தி மொழியில் விண்ணப்பித்ததை நிராகரித்த ரயில்வே பெண் அதிகாரியை ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மிரட்டியிருப்பது மும்பை ரயில்வே ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மத்திய ரயில்வே அலுவலகத்தில் அத்துறை தொடர்பான சில விவரங்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கோரி மராத்தி மொழியில் அதிகாரி ஸ்வாதி சின்ஹாவிடம் சிலர் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த விண்ணப்பத்தை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதித் தருமாறு ஸ்வாதி சின்ஹா கூறியிருக்கிறார்.

இதற்கு ஆட்சேபித்து ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அந்த பெண் அதிகாரியை முற்றுகையிட்டு கெரோ செய்துள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் வேலை பார்ப்பதால் மராத்தி தெரியாது என்று சொல்லக் கூடாது; இங்கே வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் மராத்தியை தெரிந்திருக்க வேண்டும்; மராத்தி மக்களின் கலாசாரத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ந்து போன அந்த அதிகாரி கண்ணீர் சிந்த வேண்டிய நிலைதான் ஏற்பட்டது.
இந்த விவகாரம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் விண்ணப்பத்தை எழுதித் தாருங்கள் என்று கேட்டது எப்படி குற்றமாகும்? என அவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications